பஹல்காம் தாக்குதல் - கதறிய LeT...!
LeT Denies Pahalgam Attack
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணைத் தலைவர் சைபுல்லா வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி மூளையாக செயல்பட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து கண்ணீருடன் கதறியபடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா நாடகமாடுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரோ முயற்சி செய்கிறார்கள் என்றும், உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
LeT Denies Pahalgam Attack