Hit 3 படத்தில் கேமியொ ரொலில் தமிழ் நடிகர் ஒருவர்...! - நானி
Tamil actor has cameo role film Hit 3 Nani
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.இவர் தற்போது 'ஹிட் 3' படத்தில் நடித்து முடித்துள்ளார். கே.ஜி.எப் புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நானிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் 2 பாகங்கள் பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து 3 ம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நடிகர் நானி மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அப்போது ஹிட் 3 படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளனர். அதில், தமிழ் நடிகர் ஒருவர் இப்படத்தில் 'கேமியோ' நடித்துள்ளதாகவும், நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் கேமியோ இருக்கு என்றும் தெரிவித்துள்ளனர்.
அந்த சர்ப்ரைஸ் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் திரையரங்குகளில் சென்று பாருங்கள் என்றனர். அந்த கேமியோ ரோலில் நடிகர் கார்த்தி நடித்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Tamil actor has cameo role film Hit 3 Nani