பிரபல மலையாள நடிகரை கரம் பிடிக்கும் நித்யா மேனன்.?! தீவிரமாகும் பேச்சுவார்த்தை.!  - Seithipunal
Seithipunal


நடிகை நித்யா மேனன் மலையாள நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. 

நடிகை நித்யா மேனன் தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இடம்பெற்றுள்ள இரு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக நித்யா மேனன் நடித்து வருகிறார். 

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். நந்தி விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை நித்யாமேனன் பெற்றுள்ளார். அவரது முதல் விருதை பெற்ற போது அவருக்கு 17 வயதுதான். மேலும் இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார். 

தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். மேலும்,அவர் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகின்றார். இத்தகைய சூழலில், திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுவது நித்யா மேனனின் திருமணம் குறித்த விஷயம்தான். 

மலையாளத்தில் ஒரு உச்ச நடிகராக இருக்கும் ஹீரோவை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithya menon may getting marry soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->