கால்வாயில் 4 குழந்தைகளை வீசி கொன்ற சம்பவம்... தாய் மீது வழக்குப்பதிவு!
Four children killed in canal Case filed against mother
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டதில் கால்வாயில் 4 குழந்தைகளை வீசி கொன்ற தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கொல்ஹாரா தாலுகா தெலகி கிராமத்தை சேர்ந்தவர் கணவன் நிங்கராஜ் மனைவி பாக்யா. இந்த தம்பதிக்கு தனு நிங்கராஜ்(5), ரக்ஷிதா(3), ஹசன், உசேன் என்ற 13 மாத இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக தம்பதி இடையே குடும்ப சொத்துகளை பங்கிடுவது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பாக்யா, கடந்த 13-ந் தேதி நிடகுந்தி தாலுகா பினாலே கிராமம் அலமட்டி அணை பாசன கால்வாயில் 4 குழந்தைகளை வீசி கொன்றுவிட்டு, அவரும் தற்கொலைக்கு முயன்றார். அப்போது 4 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.அதிர்ஷ்டவமாக மனைவி பாக்யா மீட்கப்பட்டு விட்டார்.
இதுகுறித்து நிங்கராஜ் மனைவி மீது நிடகுந்தி போலீசில் புகார் அளித்தார் கணவன் . ஆனால் விசாரணையின் போது பாக்யா, கணவர் தான் குழந்தைகளை கால்வாயில் வீசி சென்றதாக கூறினார். இதனால் கணவன் ,மனைவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பாக்யா தான் குழந்தைகளை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பாக்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Four children killed in canal Case filed against mother