தனுஷுடன் மீண்டும் இணையும் நித்யா மேனன்! - Seithipunal
Seithipunal


தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடித்து தற்போது பிரபல நடிகையாக நித்யாமேனன் வலம் வருகிறார்.

இதற்கிடையேயே  இவரது நடிப்பில் வெளியான 'ஓகே கண்மணி, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. மேலும், மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு தனுஷுடன் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் மீண்டும் தனுஷுடன் நடிக்கயிருப்பதாக  நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு மீண்டும் தனஷுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன் என்றும், அந்த படத்தை அவரே இயக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், அதுவும் சிறந்த படமாக இருக்கும் என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nithya Menon reunites with Dhanush


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->