நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு சமுதாய ஆஸ்கர் விருது அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலக அளவில்  சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு 2021 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி படம் வெளியிடப்பட்டதுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ராஜா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினர் நேரடியாக வந்து விருதுகளை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021 என்ற பிரிவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. உலக அளவில் வளர்ந்து வரும் தலைவர்களால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விருது வழங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oscar award for suriya jyotika and udhayanidhi stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->