நடுக்கடலில் ‘குலு குலு’ திரைப்பட பேனர் வைத்து பால் அபிஷேகம்.! நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் வெறித்தனம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் காந்தி சிலை பின்புறத்தில் உள்ள பழைய துறைமுகத்தின் இரும்பு தூண்களில்  புதுப்படங்கள் வெளியானால்  ரசிகர்கள் ஆபத்தை உணராமல் பேனர்கள் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்த நிலையில், நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘குலு குலு’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் சந்தானம் தலைமை மன்றத்தின் சார்பில் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்துள்ளனர்.

இது போன்று புதுப்படங்கள் வெளியானால் ஆபத்தை உணரமால்  ரசிகர்கள் தங்களது ஹீரோக்களை கொண்டாடும் வகையில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து உற்சாகமாகக் கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் சந்தானம் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் 'குலுகுலு' திரைப்படத்தை கொண்டாடும் வகையில் நடுக்கடலில் வைத்த பேனர் சிறிது நேரத்தில் கடல் அலைகளால் அடித்து செல்லப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paal Abhishekam Gulu Gulu movie banner middle of the ocean Actor Santhanams fans


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->