தமிழ்நாட்டை உலுக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கொலை வழக்கு!முக்கிய கொலையாளி கைது!
Law student murder case that rocked Tamil Nadu Main killer arrested
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கிழ நடுத்தெருவை சேர்ந்த செல்லத்துரையின் மகன் மணிகண்டன் (வயது 22), சென்னையில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவராக இருந்தார். விடுமுறை நாட்களுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த மணிகண்டன், 19 ஆம் தேதி வயலிலிருந்து வீடு திரும்பும் வழியில், மாயாண்டி (வயது 46) மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு கோடாரங்குளத்தில் சிவராமன் (வயது 25) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மணிகண்டனின் நெருங்கிய உறவினர் மீது சந்தேகமுண்டானது. அந்த சம்பவத்திற்கு பழி தீர்க்கும் நோக்கில் சிவராமனின் தாய்மாமா மாயாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலைக்குப் பிறகு மாயாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பிச் சென்றனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று மாயாண்டி நெல்லை அருகே காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் அந்த இடத்திற்கு விரைந்தனர். போலீசாரை கண்ட மாயாண்டி தப்பி ஓட முற்பட்ட போது தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
கைது செய்யப்பட்ட மாயாண்டி, வலது கையில் முறிவு ஏற்பட்டதால், நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
மாயாண்டியுடன் தொடர்புடைய மேலும் மூன்று கூட்டாளிகளை பிடிக்க தனிப்படைகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கொலைச் சம்பவம், பழிக்குப்பழி வன்முறை தொடர்ச்சியானது மற்றும் கிராமங்களுக்கிடையிலான வன்முறைகள் மீண்டும் பொறுப்பேற்கிறதோ என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. போலீசார் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Law student murder case that rocked Tamil Nadu Main killer arrested