தவெக கொடியை இறக்கிய நிர்வாகி! கட்சியில் பெண்களுக்கு மரியாதையே இல்லை - அதிர்ச்சி காணொளி!
TVK Ariyalur Priyadharshni video viral
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து பெண் நிர்வாகி ஒருவர் விலகுவதாக ஊடகத்திற்கு பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி நிர்வாகி பிரியதர்ஷினி தான் தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தனது செலவில் தான் கொடி ஏற்றினேன் என்றும், அதனாலையே கட்சியின் கொடியை எடுத்து செல்வதாக கூறி, கொடி கம்பத்தில் இருந்த கொடியை பிரியதர்ஷினி இறக்கிய காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்றும், கட்சிக்காக இவ்வளவு செலவழித்து, இவ்வளவு உழைப்பை போட்ட எனக்கு எந்த பொறுப்பும் வழங்கவில்லை, மரியாதையை இல்லை, யாருக்கோ அந்த பொறுப்பை தருகிறார்கள் என்றும் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
காணொளி நன்றி : பாலிமர் செய்தி
English Summary
TVK Ariyalur Priyadharshni video viral