நவம்பர் 11ஆம் தேதி முதல் உலகமெங்கும்... 'பரோல்'.! - Seithipunal
Seithipunal


இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஒரு ஆக்சன் படம் 'பரோல்'.  இப்படத்தில் லிங்கா, கல்பிகா உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளனர்.

மதுசூதனன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இது தொடர்பாகப் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது நடிகர் கார்த்திக் பேசியதாவது, "இந்தப் படம் ஒரு தாய்க்கும் இரு மகன்களுக்கும் இடையிலான ஒரு கதை. பொதுவாக வட சென்னையைப் பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அதுபோலவே இந்தப் படமும் அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஒன்றாக அமையும்" என்றுத் தெரிவித்தனர்.

இதையடுத்து, பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்ததாவது, "அழகான ஒரு கதையை எழுதி அதை, திரைக்கதை வடிவில் அமைத்துள்ளார். இந்தக் கதையில் அம்மாவிற்கும் மகனுக்குமான பாசத்தை முன்மொழிந்துள்ளார். நல்ல சிந்தனை இருந்தால் நிச்சயம் வெற்றிபெறலாம். அந்தவகையில் இந்த படக்குழு நிச்சயம் வெற்றிபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படம் குறித்து, இயக்குநர் துவாரக் ராஜா தெரிவித்ததாவது, "இந்தப் படம் ஒரு குடும்பத்தைப் பற்றிய, குடும்பங்களில் இதுவரை நாம் பார்க்காத ஒரு பக்கத்தைப் பற்றிய கதை இது.

இந்தப் படத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்சனையை, பெண்கள் சரிசெய்வதாய் இருக்கும். இந்தப் படத்தில் நடித்துள்ள பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளைச் சிறப்பாகக் செய்துள்ளனர். இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தேவை" என்றுத் தெரிந்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parol movie release in novermbar elevan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->