தென் மாவட்டங்களில் மாமன்னன்' படத்தை திரையிட தடை விதிக்க கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.!!
petition filed in chennai commissioner office for mamannan movie release south districts
உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன்' படத்தை தென் மாவட்டங்களில் திரையிட தடைவிதிக்க வேண்டும் என்று முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த திரைப்படம் 'மாமன்னன்'. இந்தத் திரைப்படம் வருகிற 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் 'மாமன்னன்' படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கோரி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், "சென்னையில் நடைபெற்ற 'மாமன்னன்' பட இசைவெளியீட்டு விழாவின் போது, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், 1992-ம் ஆண்டு வெளியான 'தேவர் மகன்' திரைப்படத்தின் தாக்கத்தால் தான் 'மாமன்னன்' படம் எடுத்தாக தெரிவித்தார். அந்தப் படத்திலுள்ள இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் படத்தின் வடிவேல் கதாபாத்திரம் என்றும் பேசியுள்ளார்.
இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 'மாமன்னன்' எனும் பட்டம் ராஜராஜ சோழன், பூலித்தேவர், மருது பாண்டியர்கள்உள்ளிட்டோருக்கு உரித்தானது, அதை படத்தின் தலைப்பாக பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் படத்தின் போஸ்டரில் நாய், பன்றியை வைத்து மாமன்னர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது.
ஆகவே, மாரி செல்வராஜின் பேச்சும், இப்படத்தின் தலைப்பும் பொது அமைதிக்கு பாதகம் விளைவிக்கும் விதமாக உள்ளதால் இந்த படத்தை தென்மாவட்டங்களில் திரையிட தடைவிதிக்க வேண்டும். இல்லையென்றால் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தங்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தலைவர் வீரா தெரிவித்ததாவது, "இயக்குநர் மாரி செல்வராஜ் குறிப்பிடும் சமூகத்தினர் இன்று பல்வேறு அரசு அமைப்புகளில் வேலை செய்து வருவதுடன், பலர் நல்ல நிலமையில் இருப்பதால் தற்போது இது போன்ற படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எல்லோருக்கும் பொதுவான அமைச்சர். அவர் இது போன்ற படங்களில் நடிப்பதை தவிர்ப்பதுடன் இனி வரும் காலங்களில் சமூதாய சிந்தனை உள்ள படங்களில் நடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
petition filed in chennai commissioner office for mamannan movie release south districts