ஜெயராம்க்கு சிறந்த விவசாயி விருது.. முதல்வர் பினராயி விஜயன் கவுரவம்.!
Pinarayi Vijay award To actor Jayaram
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மலையாள நடிகரான ஜெயராமுக்கு சிறந்த விவசாயி என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் விவசாய துறை சார்பில் இன்று திருவனந்தபுரத்தில் விவசாய தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறந்த விவசாயி எனும் விருதை நடிகர் ஜெயராம்க்கு கேரள முதலமைச்சஎ பினராயி விஜயன் கொடுத்து கவுரவித்துள்ளார்.
எர்ணாகுளம் அருகில் பெரும்பாவூர் என்ற பகுதியில் 5 1/5 ஏக்கர் நிலத்தில், ஆனந்த் பண்ணை என்ற பெயரில் நடிகர் ஜெயராம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு பண்ணையை நடத்தி வந்துள்ளார். 60-க்கும் மேற்பட்ட பசுக்களை தனது பண்ணையில் வளர்த்து வருகின்றார். இவருடைய விவசாயப் பணிகளை பாராட்டி தற்போது கேரள அரசு இந்த விருதை வழங்கி கவுரவித்து இருக்கின்றது.
English Summary
Pinarayi Vijay award To actor Jayaram