லியோ ட்ரெய்லர் ரிலீஸூக்கும் ஆப்பு! கடைசி நொடியில்.. விஜய் ரசிகர்களுக்கு பேரிடி! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கு பார்க்கிங் பகுதியில் லியோ படத்தின் டிரெய்லர் திரையிட கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி வழங்க கோரி லியோ பட குழுவினர் சார்பாக மனு அளிக்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த கோயம்பேடு காவல் நிலைய காவல்துறையினர் சென்னை காவல் ஆணையரிடம் அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு லியோ பட குழுவினருக்கு கோயம்பேடு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு நடிகர் விஜயின் லியோ படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில் கடைசி நொடியில் காவல்துறையினரின் இந்த அறிவுறுத்தல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஏற்கனவே நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சூழலில் தற்போது லியோ ட்ரெய்லர் திரையிட சென்னை காவல் ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும் என கோயம்பேடு போலீசார் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police instruct get permission from chennai commissioner leo trailer show in rohini theatre


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->