நடிகை திரிஷாவிற்கு போலீசார் கடிதம்: எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. இது தொடர்பாக ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வற்புறுத்தியது. 

அதன் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார். 

இந்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் கிடைக்காத நிலையில் திரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். பின்னர் த்ரிஷாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை என மீண்டும் சர்ச்சையை கிளப்பினார்.

மேலும் நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடர் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவரது பேச்சு குறித்து த்ரிஷாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்து ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் திரிஷாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 

அதில், மன்சூர் அலிகான் மீது போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக உங்களிடம் சில விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால் நீங்கள் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக போலீசார், தாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தை ஏற்று நடிகை திரிஷா நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதா இல்லை தபால் விளக்கம் அளிப்பதா என்பது அவரது விருப்பம் என தெரிவித்தனர். 

இந்த கடிதத்தை அனுப்பி சில நாட்கள் ஆகிவிட்டது என்றும் இதற்கு த்ரிஷா விளக்கம் அளிக்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police letter to actress Trisha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->