பொன்னியின் செல்வன் 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்ட படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது.

பெரும், எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வசூல் ரீதியாக பயங்கரமாக வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 4- ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் நடிகை த்ரிஷா 'குந்தவை' கதாபாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட தோற்றங்களை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என பல குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin Selvan 2 1st single soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->