பிரின்ஸ், சர்தார் படங்களை ஓரங்கட்டி வெற்றி நடை போடும் பொன்னியின் செல்வன்! - Seithipunal
Seithipunal


தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் கார்த்திகேயன் சர்தார் படமும் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் மாறுபட்ட விமர்சனங்களையும் கார்த்திக்கின் சர்தார் படம் நேர்மையான விமர்சனங்களையும் பெற்றுள்ளன. தெலுங்கு பட இயக்குனர் அனுதின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான படம் பிரின்ஸ். இந்த படத்தில் நாயகியாக உக்கிரன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ் பிரேம்ஜி சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இதேபோன்று பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடித்த சர்தார் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் ராஷி கண்ணா, ரதிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் மைய கரு தண்ணீர் அரசியல் குறித்தும் உளவாளி ஒருவனின் வாழ்க்கை குறித்தான படமாக வெளியாகி உள்ளது.

திரைப்படத்தின் விமர்சனங்கள் அடிப்படையில் மக்கள் இந்த இரு படத்தின் மீது ஆர்வம் குறைந்ததால் திரையரங்குகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்லும் படத்திற்கு மக்களிடையே ஆர்வம் இன்னும் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. நேற்று வெளியான இரு திரைப்படங்களுக்கு இடையே பொன்னியின் செல்வன் தமிழகத்தில் ரூ.2 கோடி அளவுக்கு வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin selvan over take Prince and sardhar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->