கார்த்தி -சுந்தர் சி கூட்டணி உறுதி; டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு..?
Karthi will act in the film directed by Sundar C
தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களில் நகைச்சுவை படங்களை இயக்குவதில், பேய் படங்களை நகைச்சுவையாகவும், பல பாகங்களை தொடர்ந்து வெளியிடுபவர் சுந்தர்.சி. இவர் நல்ல நடிகரும் கூட. தமிழ் மற்றும் தெலுங்கில் 30 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த சுந்தர்.சி. குடும்ப படமான 'முறை மாமன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா' ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து, பல்வேறு முன்னணி நடிகர்களும் இவரிடம் கதை கேட்டு வருகின்றார்கள். தற்போது இவர் 'கேங்கர்ஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படம் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கவுள்ளார்.
-svzyc.png)
தற்போது, சுந்தர் சி மற்றும் நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது கார்த்தியிடம் சுந்தர் சி, கதை ஒன்றை கூறியுள்ளார். அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாக கூறப்படுகிறது.
ஆக, சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கப்போவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது நடிகர் கார்த்தி 'வா வாத்தியார் மற்றும் சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Karthi will act in the film directed by Sundar C