ரசிகன் நான்!!! அவருடைய ஆரா, ஸ்மெல்... 3 நாள் குளிக்கவே இல்ல...!!! - சிவராஜ் குமார்
His aura smell havent taken bath for 3 days Shivraj Kumar
சூப்பர்ஸ்டார் 'ரஜினிகாந்த்' மற்றும் பிரபல இயக்குநர் 'நெல்சன்' கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்". இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் பல கோடிகளை குவித்தது.

இந்நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ம் பாகம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.மேலும் முதல் பாகத்தைப் போல 'ஜெயிலர் 2' படத்திலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சிவராஜ் குமார் தெரிவித்ததாவது, "எனக்கு அமிதாப் பச்சன், கமல்ஹாசன் தான் மிகவும் பிடிக்கும். கமல்ஹாசன் என்றால் அழகு.
நான் பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயமாக அவரை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன். இதை நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.ஒருமுறை அவர் வீட்டுக்கு வரப்போ நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
யார் இது என்று என் அப்பாவிடம் கமல் சார் கேட்க, என் பையன் தான் என்று சொன்னார். அப்போ கமல் சார் கிட்ட உங்களை ஒரு முறை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டேன்.
அவரும் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். மூணு நாள் நான் குளிக்கவே இல்லை. ஏன்னா, அவருடைய ஆரா மற்றும் ஸ்மெல் என் மீது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த மாதிரி ஒரு ரசிகன் நான்" என்று தெரிவித்தார்.
English Summary
His aura smell havent taken bath for 3 days Shivraj Kumar