​விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் பான் இந்தியா படம்! தபுவுடன் ராதிகா ஆப்தே கூட இணைந்தார்! - Seithipunal
Seithipunal


மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் மாஸ்டர் பூரி ஜெகன்நாத்தும் இணைந்து உருவாக்க உள்ள பான் இந்தியா படத்துக்கான அப்டேட்டுகள் அட்டகாசமாக வெளியாகி வருகின்றன!

2000-ஆம் ஆண்டு பவன் கல்யாணுடன் ‘பத்ரி’ படத்தை இயக்கி, தன்னுடைய டைரக்டர் கரியரையே வெற்றிகரமாக துவங்கினார். அதன் பிறகு தெலுங்கு, கன்னட சினிமாவில் பீச்சு பீச்சாக ஹிட் படங்களை கொடுத்து, ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கினார்.

தற்போது, தன்னுடைய கனவு திட்டமான புதிய படத்தில், விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படம் பான் இந்தியா படம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை பூரி ஜெகன்நாதுடன் சேர்ந்து சார்மி கவூர் தயாரிக்கிறார்.

முதலில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் தபு நடிக்கப்போவதாக தகவல் வந்தது. தற்போது அதற்கு மேலும் மிளிரும் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கு! ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்!

இந்த கதாபாத்திரம் ஒரு இரண்டாவது நாயகி போலதான் இருந்தாலும், தனக்கு முக்கியத்துவம் இருந்ததால், ராதிகா ஆப்தே கேதையை கேட்டதும் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், விஜய் சேதுபதி இதுவரை நடித்ததில்லாத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார். படம் உணர்வுப்பூர்வமான கதைக்கருவில் தயாராகப்போகிறது என்று கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி – தபு – ராதிகா ஆப்தே – பூரி ஜெகன்நாத் – சார்மி கவூர்... இந்த டீம் பார்க்கும்போதே goosebumps! இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா அளவில் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

​Vijay Sethupathi Puri Jagannath team up for a Pan India film Radhika Apte also joins Tabu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->