பிரின்ஸ் படம் தோல்வி.. 3 கோடி நஷ்ட கோடி வழங்கிய சிவகார்த்திகேயன்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கில் 'ஜதி ரத்னாலு' என்ற நகைச்சுவை வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் அனுதீப். இவரை தமிழுக்கு கொண்டுவந்த சிவகார்த்திகேயன், அனுதீப் இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்‌ஷன் தயாரிக்க சிவகார்த்திகேயன் நடித்து வெளியான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். 

தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த பிரின்ஸ் படம் படு தோல்வியடைந்தது படக்குழுவிற்க்கே சற்று அதிர்ச்சிதான். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் "கிரிஞ் மூவி, பூமர் அங்கிள்" என்றல்லாம் கடுமையான விமர்சனம் செய்தனர்.

தமிழகத்தில் இந்த படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிட்டிருந்த நிலையில், விநியோகஸ்தருக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், 'பிரின்ஸ்' படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கி உள்ளார். அதனை ஈடு கட்டும் விதமாக சிவகார்த்திகேயன் ரூ.3 கோடியும், தயாரிப்பு நிறுவனம் ரூ.3 கோடி என மொத்தம் ரூ.6 கோடி நஷ்ட ஈடாக வழங்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prince movie flop Sivakarthikeyan gave Rs 3 crore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->