பிக்பாஸில் கலந்து கொண்டது தப்பா போச்சே.. பிரியங்காவின் அடிமடியில் கைவைத்த விஜய் டிவி.! - Seithipunal
Seithipunal


ஸ்டார்ட் மியூசிக் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்தான் விஜய் டிவி பிரியங்கா. வெள்ளித்திரையில் எந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் கிடைக்கிறதோ? அதே அளவிற்கு சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

விஜய் தொலைக்காட்சியில் டிடிக்கு அடுத்தபடி இருப்பவர் பிரியங்கா தான். தனது கலகலப்பான பேச்சால் பலரையும் கவர்ந்தவர். இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது ரசிகர்களை இழந்தார். இறுதிப்போட்டி வரை அவர் முன்னேறி இருந்தாலும் கூட ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டார். 

இவர் பிக் பாஸுக்கு சென்றதால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து மைனா நந்தினி தான் தொகுத்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் பிரியங்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத காரணத்தால் மீண்டும் மைனா நந்தினியை அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக போட விஜய் டிவி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka may loss Start Music program


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->