தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் அட்ஜெட்ஸ்மெண்ட் செய்ய வேண்டும்! தமிழ் திரை உலகிலும் பாலியல் குற்றங்கள்! - நடிகை ஷகிலா! - Seithipunal
Seithipunal


தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலமானவர் ஷகீலா. தற்போது தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் திரை உலகமே நிலை குலைந்து போய் உள்ளது. 

மலையாள திரை உலக அமைப்பான அம்மா அமைப்பு தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் இச்சம்பவத்தால் ராஜினாமா செய்தனர். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி அனைத்து திரை உலகிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்நிலையில், சில தினங்களாக பல நடிகைகள் ஒவ்வொரு நாளும்  புதிய புதிய பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை ஷகிலா தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியது:-

மலையாள திரை உலகில் பாலியல் தொல்லை இருப்பது போன்று தமிழ் திரையுலகிலும் இந்த மாறி பிரச்சினை நிறைய உள்ளது. குறிப்பாக தெலுங்கு திரை உலகில் இதைவிட அதிகமாகவே இருக்கிறது. இந்தியை பொறுத்தவரை அப்படி அல்ல. அவர்கள் நல்ல நண்பர்களாக பழகி விடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கோச் பிரச்சினை இல்லை . ஆனால் அங்கு நெபோடிசம் பிரச்சினை அதிகமாக உள்ளது.

புதிய நடிகர்கள் யாரையும் வளரவிட கூடாது என்பதற்காக தங்களின் வாரிசுகளையே முன்னணி நடிகர்களாக்க முயற்சிப்பது போன்ற பிரச்சினை அதிகமாக உள்ளது. இதைபோன்ற பாலியல் பிரச்சினைகள் தெலுங்கில் அதிகமாக உள்ளது. இவை எல்லாம் பேசி வைத்துக் கொண்டுதான் செயல்படுகிறது. ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் கூறி விடுவார்கள். அந்த நடிகை இதற்கு சம்மதித்துதான் அந்த படத்தில் நடிப்பார்.

மேலும்,படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதால் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். இதன் காரணமாக பல சிக்கல்கள் வருகிறது. குடும்ப சூழல் காரணமாக பாலியல் தொல்லைகளை சிலர் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். யாரும் சொல்லாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. பூனைக்கு யாராவது மணிக்கட்டியே தீர வேண்டும்.

இவ்வாறு நடிகை ஷகிலா கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Producer and actor have to make adjustments Sexual crimes in Tamil film world Actress Shakila


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->