மருந்து வாங்க கூட காசு இல்லாமல் இருக்கிறேன் - வீடியோவில் கதறிய பிரபல தயாரிப்பாளர்.!
producer v a durai says help for medical treatment vedio viral
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் வி.ஏ.துரை. இவர் தமிழ் சினிமாவில், என்னம்மா கண்ணு, பிதாமகன் ,லவ்லி, கஜேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களைத் தயாரித்துள்ளார். அத்துடன், எவர்கிரின் மூவிஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி பலப் படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ துரை உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவரை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லாமல், காலில் ஆறாத காயத்துடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே வி.ஏ துரை "தான் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும் யாராவது உதவினால் நன்றாக இருக்கும்" என்று சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “ நான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் காலில் எலும்புகள் தெரியும் அளவிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளது.
என்னை கவனித்துக் கொள்ள ஆளில்லாமல் உள்ளேன். மருந்து வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறேன். எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் “ என்றுத் தெரிவித்தார்.
இவருடைய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதை பார்த்த நடிகர் சூர்யா உடனே மருத்துவ செலவுக்காக ரூபாய் 2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
English Summary
producer v a durai says help for medical treatment vedio viral