பி.எஸ்.1 படத்தின் ஓடிடி ரிலீஸ்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அமேசான்.!    - Seithipunal
Seithipunal


சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் பொன்னியின் செல்வன். நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப்  பெற்றுள்ளது. 

உலக அளவில் இந்தப் படம் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அதற்கான புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ps 1 OTT release ameson


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->