5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்பாடு; ராகுல் காந்தி மகிழ்ச்சி பதிவு..! - Seithipunal
Seithipunal


இரும்பின் காலம் தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கியது என்றும் அது, 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அத்துடன், மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு  ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். அதாவது, அவருடைய பதில் பதிவில்,

இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தியதை தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இது இரும்பு யுகத்தில் இந்தியாவின் தொடக்ககால முன்னேற்றத்தை காட்டுகிறது.

தமிழ்நாட்டின் பங்களிப்புகள், நாடு முழுவதும் எண்ணற்ற மைல்கற்களுடன் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும், குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iron was introduced to Tamil Nadu 5300 years ago


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->