வெளியானது ராயன் படத்தின் முதல் பாடல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்தப்படத்துக்கு 'ராயன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

 இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

இதையடுத்து 'ராயன்' படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராயன் படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' வெளியாகி தனுஷின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தப்படம் ஜூலை மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raayan movie first song released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->