நடிகர் ரஜினிகாந்த் - ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு! எதற்காக தெரியுமா?
Raghava Lawrence meeting Actor Rajinikanth
நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான 'சந்திரமுகி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ''காஞ்சனா 4'' திரைப்படத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே 'மாற்றம்' என்ற பெயரில் தன்னார்வ அமைப்பை துவங்கி ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
அதில் ஒரு பகுதியாக ஏழ்மை நிலையில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கி வருகிறார். அதுபடி இதுவரை 13 டிராக்டர்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இது குறித்து ராகவா லாரன்ஸ் வலைதள பதிவில், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து மாற்றம் அமைப்பிற்கான ஆசிகளை பெற்றுள்ளதாக புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Raghava Lawrence meeting Actor Rajinikanth