ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் 2 திரைப்படங்கள்! வெளியான அதிரடி தகவல்.!
Raghava Lawrence produced 2 movies
நடிகர் ராகவா லாரன்ஸின் ராகவேந்திரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தில் புதியதாக 2 படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலமாக பலருக்கும் உதவி செய்து வருகின்றார். மேலும் அவர் விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்கள் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில், ராகவேந்திரா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் 2 திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக வெளியான 'சந்திரமுகி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
English Summary
Raghava Lawrence produced 2 movies