'சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க' என கோஷமிட்ட விஜய் ரசிகரை புரட்டி எடுத்த ரஜினி ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க வந்த விஜய் ரசிகர் ரஜினிக்கு எதிராக கோஷமிட்டதால் ரஜினி ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியது. இதனை ரஜினி ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனையடுத்து அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னை வெற்றி திரையரங்கில், விஜய் ரசிகர்கள் சிலர் ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க வந்துள்ளனர். அப்போது அங்கு ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பி உள்ளனர். அதன்படி 'சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க' என்றும் 'ரஜினி ஒழிக' என்றும் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini fans attack vijay fan in Chennai viral video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->