ரசிகர்களே ரெடியா.. ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கின்ற திரைப்படம் தான் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாக இருக்கின்றது. 

ஏற்கனவே, அயல் நாடுகளில் பட புக்கிங் துவங்கி, ரசிகர்கள் அதற்கான டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். ஆனால், இன்னும் இந்திய மற்றும் தமிழக ரசிகர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் இன்னும்  வாய்ப்பு கிடைக்கவில்லை எனும் ஏக்கம் இருந்து வருகின்றது.

இன்று ஜெயிலர் திரைப்படத்தின் தமிழக டிக்கெட் புக்கிங் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது. சென்னையின் பிரபல திரையரங்குகளில் ஒன்றான கமலா சினிமாஸ் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இது பற்றி கமலா சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கின்றது.

அந்த பதிவில், 'ஜெயிலர் படத்திற்கான முன்பதிவு இன்று கமலா திரையரங்கில் திறக்கப்படவுள்ளது. சரியான நேரத்தில், முத்துவேல் பாண்டியனை சந்திக்க தயாராகுங்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'Jailer FDFS காலை 9:00 மணிக்கு துவங்கும்.' என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயிலர் படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லை என்பது தெளிவாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini in jailor movie booking open


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->