பிறந்த நாளில் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி.. ஆனால், ஒரு ட்விஸ்ட்.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.?!  - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நாளை அவரது 73 வது பிறந்தநாள் விழாவை கொண்டாட இருக்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். திருச்சியில் சில பகுதிகளில் ரத்ததான மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே தனது பிறந்த நாளில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருவார். அந்த வகையில், இந்த ஆண்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். ஆனால், இந்த ஆண்டு அதிசயமாக தனது வீட்டில் மேடை அமைத்து வீட்டிற்குள் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார்.

பொதுவாக அவர் கேட் பகுதியில் வந்து நின்று ரசிகர்களை பார்த்து கைகாட்டி விட்டு செல்வார். ஆனால், இந்த ஆண்டு அவர் மேடையில் ரசிகர்களை வீட்டிற்குள் அழைத்து சந்திக்க உள்ளது. பெரும் புதுமையான விஷயமாக பார்க்கப்படுகிறது. அவரது வீட்டின் முன் வாழை மரங்கள், தோரணங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளது. 

இப்படி மகிழ்ச்சியுடன் ரசிகர்களை ரஜினி சந்திக்க இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் பாபா படம் ரஜினியின் வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வி படமாக பார்க்கப்பட்டது. தற்போது அந்த பாபா படத்தை நவீன மயமாக்கி ரீ ரிலீஸ் செய்து பாபா படத்தின் மீதான தோல்வி கறையை நீக்கியுள்ளார். இதுதான் அவரது மகிழ்ச்சிக்கும் ரசிகர்களின் சந்திப்பிற்கும் காரணம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth meet Fans On December 12 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->