ராஜ்கிரன் மகளை பதிவு திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகர்.?! முகநூலில் மலர்ந்த காதல்.! - Seithipunal
Seithipunal


திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் முனீஸ் ராஜா. இவரது நடைக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது இவர் சில சீரியல்களில் நடித்து வருகின்றார். 

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பழனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இத்தகைய சூழலில் முனீஸ் ராஜாவுக்கும் பிரபல நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் இடையே காதல் மலர்ந்து தற்போது திருமணமாகியுள்ளது. 

தமிழ் உணர்வு என்று வசனம் பேசினால் மட்டும் போதாது; நடிகர் ராஜ்கிரண் கண்டனம்  - lifeberrys Tamil இந்தி

இரண்டு பேர் வீட்டிலும் ஆரம்பத்தில் இந்த காதலை ஏற்கவில்லை. ஆனால், தொடர்ந்து சமாதானப்படுத்தி எப்படியோ திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இவர்களது திருமணத்திற்கு ராஜ்கிரண் சம்மதித்து விட்டதாகவும், ஆனால் ராஜ்கிரனின் மனைவி இந்த திருமணத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பேஸ்புக் மூலமாக இருவரும் பழகி தற்போது திருமணம் வரை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajkiran daughter marriage


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->