25 ஆடிசன்களில் நிராகரிப்பு - தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் தெரியுமா?
Rejected in 25 Auditions Do you know who is currently the highest paid South Indian actress
பல்வேறு நிராகரிப்புகளை எதிர்கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக இருக்கிறார்.
![](https://img.seithipunal.com/media/rashmika-an8rh.jpg)
இந்திய திரையுலகில் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த் போன்றவர்கள் நட்சத்திர அந்தஸ்த்தை பெற பல்வேறு கஷ்டங்களை கடந்து வந்துள்ளனர். இதற்கிடையேயே தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வருகிறார். இநிலையில் ஆரம்ப கட்டங்களில், இவரை நடிகைபோல் தெரியவில்லை எனக் கூறி, 20 முதல் 25 படங்களின் ஆடிஷன்களில் நிராகரித்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியிருந்தார்.
![Rashmika Mandanna turns 28: Ads and endorsements of India's national crush](https://exchange4media.gumlet.io/news-photo/133634-main12.jpg)
இவ்வாறு பல நிராகரிப்புகளை கடந்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக இருக்கிறார். ராஷ்மிகா, தற்போது புஷ்பா படத்தின் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும், 2 பாலிவுட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.
English Summary
Rejected in 25 Auditions Do you know who is currently the highest paid South Indian actress