நரிக்குறவர் சமூகத்தினரை, தியேட்டருக்குள் அனுமதிக்காதது சாதிய பாகுபாடா.? ரோகிணி திரையரங்கம் சார்பில் விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் இன்று வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க, ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின் பணிகளனைத்தும் முடிந்து, இசை வெளியீட்டு விழா நடந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் இன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த பத்து தல படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

எனவே வழக்கம்போல திரையிடப்பட்ட பத்து தல திரைப்படத்தை ரோகிணி திரையரங்கில் காண முதல் காட்சிக்கு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இருவர் டிக்கெட் வைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது திரையரங்க ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் சிம்பு ரசிகர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை உள்ளே விடுமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ரோகிணி திரையரங்கம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "சாதிய பாகுபாடு காரணமாக அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கவில்லை எனவும், இது யு/ஏ படம் என்ற காரணத்தால் குழந்தைகளுடன் அவர்கள் படம் பார்க்க வந்ததை தடுத்தோம்." என்றும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohini Theatre Staffa explain about Castism Issue on pathu Thala First Show 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->