குஷியோ குஷி!!! 'சின்னக்கு சின்னக்கு சின்.... சச்சின்' ஏப்ரலில் ரீ- ரிலீஸ் 'சச்சின்' திரைப்படம்...!!!
Sachin movie to be re released in April
தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் வெளியாகி வெற்றிப் பெற்ற படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ - ரிலீஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.இதில் ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த வரிசையில் இளையதளபதி விஜய்யின் 'கில்லி' படமும் திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய் நடித்த 'சச்சின்' படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் திரைக்குக் கொண்டு வரப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'சச்சின்' படம் அடுத்த மாதம் 18-ந்தேதி மீண்டும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.'சச்சின்' படம் 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா நடித்திருந்தார்.
இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கி , கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.இப்போது இந்தப்படத்திற்காக விஜய் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
English Summary
Sachin movie to be re released in April