தொடர்ந்து வசூலை குவிக்கும் 'சலார்': படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

திரைப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 

இந்த திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.178.7 கோடி வசூலித்து 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் முதலிடம் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் ரூ. 500 கோடி வசூலித்துள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salaar movie collections update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->