வெற்றி கொண்டாட்டத்தில் ''சலார்'' படக்குழு: வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''சலார்''. இந்த திரைப்படத்தில் பிரித்விராஜ் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

கடந்த 2023 டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை ஹாம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் சலார் திரைப்படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salaar movie success meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->