பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை கைப்பற்றிய உதயநிதி!
salaar movie update
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் பிரித்விராஜ், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது.
![](https://img.seithipunal.com/media/salaar 1011-tv573.jpg)
இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/salaar-vzgxy.jpg)
இது தொடர்பான போஸ்டர் ஒன்றை பட குழு பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.