இவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் சமந்தாவின் அந்த அப்டேட்.!
Samantha update in sagunthalam movie
சமந்தாவின் நடிப்பில் இறுதியாக யசோதா திரைப்படம் வெளியாகியது. ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகிய நிலையில் அடுத்ததாக அவரது சாகுந்தலம் படம் வெளியாக இருக்கின்றது. அவர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி படத்தில் நடித்து வருகின்றார்.
இதற்கிடையில் அவருக்கு மையோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். இவரது யசோதா திரைப்பட டப்பிங்கின் போதே உடல்நிலை மோசமாகி ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார். தொடர் சிகிச்சையில் இருக்கும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வந்தார்.

இவரது நோயின் தீவிரத்தை பார்த்த மருத்துவர்கள் உயர்தர சிகிச்சைக்காக அவரை தென்கொரியாவிற்கு அனுப்ப திட்டமிட்டனர்.
இத்தகைய நிலையில், சாகுந்தலம் திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் தான் முழுவீச்சில் ஈடுபடும் புகைப்படத்தை முன்னதாக சமந்தா பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் 'இந்த பைத்தியக்காரத்தனம், துக்கம், இழப்பு என அனைத்துக்கும் கலை தான் சிகிச்சை. அதன் மூலம் நான் குணம்பெற்று வீட்டுக்கு செல்வேன்' என பதிவிட்டுள்ளார்.
English Summary
Samantha update in sagunthalam movie