நேருக்கு நேர் மோதிய லாரிகள் - தீயில் கருகி ஓட்டுநர் பலி.!
driver died for orry accident in thiruvannamalai
திருவண்ணாமலையில் இருந்து சிமெண்டு கலவை ஏற்றி கொண்டு டேங்கர் லாரி இன்று அதிகாலை திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டேங்கர் லாரியை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் ஓட்டிச் சென்றார்.
அதன் படி இந்த லாரி பாச்சல் அருகே சென்ற போது எதிரே வந்த மினி சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் வாகனங்களின் டயர்களும் வெடித்து சிதறின.

இந்த கோர விபத்தில் மினி சரக்கு லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் பிரதாப் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். டேங்கர் லாரியை ஓட்டி வந்த ரகு படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்களுடன் வந்த போலீசார் தீயை அணைத்து படுகாயமடைந்த ஓட்டுநர் ராகுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த ஓட்டுனரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
driver died for orry accident in thiruvannamalai