13 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் சசிகுமார் என்ட்ரி - பாலிவுட் இயக்குனருடன் மாஸ்டர் பிளான்! - Seithipunal
Seithipunal


சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இவர் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பல பரிணாமங்களுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஈசன் திரைப்படத்திற்கு பிறகு இவர் முழு நேரமும் நடிகராக மட்டுமே சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

நாடோடிகள், சுந்தரபாண்டியன், கிடாரி  எனத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த சசிகுமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி என்ற திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பற்றி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  நல்ல கதைகளை தேர்வு செய்து   படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சசிகுமார்.

மேலும் கோலிவுட் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியாக 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கயிருக்கிறார் சசிகுமார். இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. சமுத்திரக்கனி நடிப்பில் ஈசன் திரைப்படத்தை சசிகுமார் இயக்கியிருந்தார்.

அதன் பிறகு தற்போது தான் மீண்டும் இயக்குனராக பணியாற்ற இருக்கிறார்  சசிகுமார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப்  இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது ஒரு வரலாற்று பின்னணி கொண்ட படமாகயிருக்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasi kumar will direct a movie after 13 years anragkashyap will be doing the lead role


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->