நடிப்பை கைவிடும் சசிகுமார்! மீண்டும் மீண்டும் தோல்வி! கடைசி யுத்தியை கையில் எடுத்த சசி! - Seithipunal
Seithipunal


சசிகுமார் தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக கலைஞர் ஆவார் .

ஆரம்பகாலத்தில் இவர் இயக்குனர் பாலா மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு இயக்குனராக சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கியும், தயாரிப்பாளராக சுப்ரமணியபுரம், பசங்க போன்ற திரைப்படங்களை தயாரித்தும் வெள்ளிதிரையில் தடம் பதித்தார்.

பொதுவாகவே இயக்குனர்களுக்கு ஹீரோவாக  வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது .

அந்த வகையில் தான் சசிகுமார் இயக்கத்தை கைவிட்டு விட்டு சுப்ரமணியபுரம் ,நாடோடிகள் போராளி, சுந்தரபாண்டியன் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் .

ஆரம்பத்தில் இவர் நடித்த  சுந்தரபாண்டியன் ,குட்டி புலி போன்ற படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு பெரிய படங்கள் எதுவும் போகவில்லை ஆனாலும் நடிப்பின் மீது உள்ள நாட்டத்தின் காரணமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சசிகுமார் நடிப்பில் நந்தன் என்ற படம் உருவாகி இருக்கிறது.

  இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி பேட்டி ஒன்றில், தான் மீண்டும் படங்களை இயக்க உள்ளதாக கூறியிருந்தார்.

இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .

ஏனென்றால் சசிக்குமாரின் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படம் இப்போதும் பலராலும் பேசப்பட்டு வருகிறது .

இவ்வாறு சில அருமையான படத்தை கொடுத்துவிட்டு படங்களில் நடிக்க சென்றது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தமாக தான் இருந்தது .

மேலும் இப்போது சசிகுமார் படத்தை இயக்குவதாக சொன்னவுடன் சுப்பிரமணியபுரம் போல் ஒரு படத்தை கொடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் சமீப காலமாக வயல் வரப்பு, கிராமங்கள், குடும்பம் சார்ந்த படங்கள் வருவது மிகவும் குறைந்துவிட்டது.

வெறும் ஆக்சன் மற்றும் ரத்தமும் கத்தியுமாக வன்முறையை தூண்டும் விதமாக தான் படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது.

சசிகுமாரின் படங்களில் இது போன்ற ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றாலும் ஒரு யதார்த்தமான படமாக தான் இருக்கும்.

மேலும் டைரக்சன் பக்கம் சசிகுமார் சென்றால் இனி உங்கள் சங்கார்த்தம் வேண்டாம் என்று நடிப்புக்கு முழுக்கு போடவும் வாய்ப்பு இருக்கிறது. சசிகுமாரின் இயக்கம் குறித்த இந்த முடிவு அவருக்கு கண்டிப்பாக ஒரு நல்ல வெற்றியை தொடர்ந்து கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikumar gives up acting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->