அடேங்கப்பா அப்பவே அவ்வளவு சம்பளம் வாங்கினாரா சத்யரா - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் சத்யராஜ். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் குணச்சித்திர நடிகர் என பல பரிணாமங்களிலும்  தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

அமைதிப்படை, வால்டர் வெற்றிவேல்,  100 நாட்கள், கடலோரக் கவிதைகள்,  அண்ணா நகர் முதல் தெரு என இவரது வெற்றி படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பாகுபலி திரைப்படத்தில் 'கட்டப்பா' என்னும் கதாபாத்திரத்தில்  இவர் நடித்து  இந்திய சினிமா ரசிகர்கள்  அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சினிமாவில் குணச்சித்திர தந்தை கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வருகிறார் இவர். சினிமாவிற்கு நடிக்க வந்த 40 ஆண்டுகளாகியும் இவரது மார்க்கெட் இன்றும் சரியாமல் அப்படியே இருக்கிறது. சத்யராஜ் சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகளான நிலையில்  அவர் முன்னணி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தபோது என்ன சம்பளம் வாங்கினார் என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.

அந்தத் தகவல்களின்படி 90 காலகட்டங்களில் சத்யராஜ்  20 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறார். இது அன்றைய முன்னணி ஹீரோக்களான உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு இணையான சம்பளமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sathyaraj salary when he is at the peak of his career


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->