பெரியார் போன்ற தலைவர்கள் குறித்து விஜய் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது - நடிகர் விஜய்.!
Sathyaraj speech about Vijay honour students function
நடிகர் விஜய் நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், நாளைய வாக்காளர்கள் நீங்கள் தான். அடுத்தடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நமது கண்ணையே குத்திக் கொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதுதான் இப்பொழுது நிகழ்ந்து வருகிறது. ஒரு ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால் ஒருவர் 15 கோடி செலவு செய்தால் அதற்கு முன் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்று சித்தித்து பாருங்கள்.
தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரை படியுங்கள் என மாணவ, மாணவிகளைக் கேட்டுக் கொண்டார்.
விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினர், அரசியல் பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் சலூன் கடை ஒன்றை திறந்து வைத்த நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது நல்ல விஷயம் அரசியலுக்கு வருவது பற்றி அவரே வெளிப்படையாக சொல்லாத போது நாம் அதை பற்றி கருத்து கூறுவதே நன்றாக இருக்காது.
அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிக்க வேண்டும் என்று விஜய் முன்னுதாரணமாக கூறியது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் விஜயே இதனை கூறுவதே எங்களை போன்றவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Sathyaraj speech about Vijay honour students function