செம்பருத்தி சீரியல் நடிகரா இது.? மொட்டை தலையுடன்.. அடையாளமே தெரியாத போட்டோ.!
Sembaruthi serial actor Karthik Raja latest photo
விஜய் தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ்.
அதன் பின்னர் ஆபீஸ் சீரியலின் 1 மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்த இவர் தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் மற்றும் செம்பருத்தி உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலம் அடைந்தார்.
இவர் செம்பருத்தி சீரியலில் படப்பிடிப்பில் ஆதிக்க தன்மையுடன் நடந்து கொண்டதாக கூறி சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது, அவர் ஒரு படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
செம்பருத்தி சீரியலுக்குப் பின் வேறு எந்த சீரியலிலும் கார்த்தி ராஜ் நடிக்காமல் இருந்து வந்தார். இத்தகைய சூழலில், அவரது படத்திற்காக அவர் முடியை வெட்டி மொட்டை போல இருக்கும் ஒரு கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் ஆளே மாறிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
English Summary
Sembaruthi serial actor Karthik Raja latest photo