புதிய வருமான வரி மசோதா; அடுத்த வாரம் தாக்கல்; நிர்மலா சீதாராமன் அறிவுப்பு..!
Nirmala Sitharaman announces that the new income tax bill will be tabled next week
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய அமைச்சரவை ஆய்வு செய்தது.
60 ஆண்டுகள் பழமையான வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மசோதாவுக்கு, அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
![](https://img.seithipunal.com/media/NAVEEN (11)-dlfut.jpg)
அதாவது நேரடி வரிச்சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ள இந்த மசோதா உதவும் எனவும், இதில் விதிகள் மற்றும் விளக்கங்கள் அல்லது நீண்ட வாக்கியங்கள் எதுவும் இருக்காது என்றும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதால், இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
![](https://img.seithipunal.com/media/tax-w3q65.jpg)
"புதிய வருமான வரி மசோதா நேற்றுஅமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா அடுத்த வாரம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். பின்னர் அது நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பப்படும். அந்த குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அந்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்." என்று நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
Nirmala Sitharaman announces that the new income tax bill will be tabled next week