பாலியல் வன்கொடுமை : குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்?...பரபரப்பு வாக்கு மூலம்! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரைப்படத்தில் புட்ட பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்ற நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறந்த நடன இயக்குநராக  அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா ஆகிய ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

இதற்கிடையே, ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர் தனது 16 வயதில் ஜானி மாஸ்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில், போலீசார் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்நிலையில்,  பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்முறையை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்புகொண்டதாகவும், அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா, எனது கணவர் ஜானி மாஸ்டரும், அந்த பெண்ணும் பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual Assault Jani Master confesses to the crime By popular vote


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->