10 வது படித்திருந்தால் போதும்! ஊர்க்காவல் படையில் ஆள் தேர்வு! எப்படி விண்ணப்பிக்கலாம்?! முழுவிவரம்!
thiruvalluvar OOr kaval padai
திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான ஆள் தேர்வு நடைபெற உள்ளது. தகுதியுள்ளவர்கள் ஜனவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 20 முதல் 45க்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி:- SSIC
இருப்பிட தகுதி : விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், அவரது இருப்பிடமானது திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் இருந்தல் வேண்டும்.
பொது தகுதி : பொதுநல சேவை, தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமுடையவராக இருந்தல் வேண்டும்.
மேற்படி தகுதிகள் உள்ள அவளவரும் https://bitly/3zNZoT என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுலவகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,
விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவண நகல்கள் -
பிறப்புச் சான்றிதழ்
ஆதார் அட்டை
கல்வி தகுதிக்கான சானிநிதர்கள்
தற்போதைய புகைப்படம்-2 (Passport Size Photol
விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள்:- 15.01,2025
English Summary
thiruvalluvar OOr kaval padai