அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு- டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு!
Police security with guns in all courts DGP Shankar Jiwal action order
நெல்லை, 2024 - நெல்லை பாளையங்கோட்டை கிழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்த சண்முகத்தின் மகன் மாயாண்டி (வயது 23) மீது நடந்த கொலைச் சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 20ஆம் தேதி மாயாண்டி, தன் சகோதரர் மாரிசெல்வத்துடன் நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு, கொலை முயற்சி வழக்கில் ஆஜராக சென்றிருந்தார்.
கொலை சம்பவம்: நீதிமன்றம் முன்பு ஒரு கும்பல் திடீரென தாக்கி, மாயாண்டியை சரமாரியாக வெட்டிக்கொன்று, காரில் தப்பி ஓடியது. சம்பவத்தின் போது, அதே இடத்தில் இருந்த போலீசாரும், வக்கில்களும் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை பிடித்தனர். விசாரணையில் அவர் ராமகிருஷ்ணன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டார்.
பழிக்குப்பழி கொலை: விசாரணையின் போது, இந்த கொலை சம்பவம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதியன்று கிழநத்தம் வடக்கூரை சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலைக்கான பழிக்குப்பழியாக நிகழ்ந்தது என தெரியவந்தது. இந்த தாக்குதலில் ராஜாமணியுடன் தொடர்புடைய மனோராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 7 பேர் கும்பலாக தீர் தீர்த்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்கள்: தீவிர விசாரணை மூலம், கிழநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த தங்கமகேஷ் (21), மனோராஜ் (27), சிவா (19), முத்துக்கிருஷ்ணன் (26), கண்ணன் (22), மற்றும் அனவரத நல்லூரை சேர்ந்த மற்றொரு கண்ணன் (20) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தமிழக டிஜிபி உத்தரவு: நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவில்:
- காவலர்கள் பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும்.
- பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளதால், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
English Summary
Police security with guns in all courts DGP Shankar Jiwal action order