ஷங்கர் - ராம் சரண் படத்திற்கு பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சங்கர் நடிகர் கமலஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களின் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். சங்கர் படம் என்றாலே பிரம்மாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். 

அந்த வகையில் தற்போது ராம் சரணை வைத்து அவர் இயக்கக்கூடிய கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. விஷூவல், ஆடியோ ரசிகர்களுக்கு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட ₹.90 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாம்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருக்கிறார். இதற்கு நடிகர் பிரபுதேவா மற்றும் ஜானி மாஸ்டர் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். பிரம்மாண்டமா பட்ஜெட், நடனம் மற்றும் பாடல்கள் என்று அனைத்திலும் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 இந்த திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து இருக்கின்றார் என்பது மேலும், ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கும் விஷயமாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shankar in Game changer movie 90 crores spend for songs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->